மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து களப்பணியாளர்களுக்கும் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார். விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மேயரிடம் காண்பித்தார்.


Coimbatore: சென்னையில் கடந்த ஆகஸ்ட் 15, 2026 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருதை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு முதல் பரிசாக வழங்கியது. இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ₹50 லட்சத்திற்கான காசோலையை இன்று (ஆகஸ்ட் 25, 2026) மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரனிடம் மாநகராட்சி ஆணையாளர் Katta Ravi Teja IAS நேரில் காண்பித்தார்.



இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 64 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது களஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.


தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை மேயர் கௌரவித்தார். தமிழ்நாடு மாநில வில்வித்தை சங்கம் ஆகஸ்ட் 15 அன்று தருமபுரி மாவட்டத்தில் நடத்திய மண்டல அளவிலான திறந்த வில்வித்தை போட்டியில், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களிலிருந்து பங்கேற்றனர்.


15 வயதிற்குட்பட்டவர்களுக்கான வில்வித்தை போட்டியில், மத்திய மண்டலம் இராமநாதபுரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர்களான சித்தேஸ்வரன் தங்கப் பதக்கம், ஜாஸ்பர் வெள்ளிப் பதக்கம், மிதுன் வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை வெற்றி பெற்றனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சர்வதேச FIDE ரேட்டிங் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, சர்வதேச ரேட்டிங் செஸ் வீரராக தேர்வு செய்யப்பட்ட சரவணம்பட்டி ஷாஜஹான் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவர் இளமாறனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


இந்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மேயரிடம் காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மேயர் பரிசுகளை வழங்கினார்.


கூட்டத்தில் உரையாற்றிய மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், "சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருதுக்கான முதல் பரிசு கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது. இவ்விருது கிடைப்பதற்கு உழைத்த மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து களப்பணியாளர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் காலங்களில் இதேபோன்று சிறந்த முறையில் பணியாற்றி இதே நிலைமையைத் தொடர வேண்டும். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது அலுவலர்கள் களஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் Dr V C Subash Gandhi, நகரமைப்பு அலுவலர் தாமோதரன், மாநகர கல்வி அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர்கள் குணசேகரன் (நிர்வாகம்), மகேஷ்கனகராஜ் (பொது), தட்சிணாமூர்த்தி (கிழக்கு), நர்மதா (மேற்கு), கணேசன் (மத்தியம்), செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வில்பவர் வில்வித்தை அகாடமி மேலாளர் வினோத், பயிற்சி ஆசிரியர் லோகநாதன், National Instructor FIDE நிறுவனர் சூர்யகுமார் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...