வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள், 8 தீயணைப்பு வாகனங்கள், 36 நீர் லாரிகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. திருப்பூர், பொள்ளாச்சியிலிருந்து கூடுதல் உதவி பெறப்பட்டது.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 99-க்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேற்று (23.08.2026) அதிகாலை 5 மணியளவில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. உரக்கிடங்கின் பின்புறம் உள்ள சுமார் 3.1 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கழிவு மற்றும் ஆகாயத்தாமரை கழிவுகள் இருக்கும் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநகராட்சியின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன் ஒருங்கிணைந்து துரிதமாக தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். D3 போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்த மாபெரும் தீயணைப்பு மற்றும் தடுப்புப் பணிகளில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வாகனங்கள் 8, கோயம்புத்தூர் மாநகராட்சி குடிநீர் லாரிகள் 7, Hitachi மண் அகற்றும் வாகனங்கள் 7, தனியார் குடிநீர் லாரிகள் 8 என மொத்தம் 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தீயணைப்புப் பணியை துரிதப்படுத்த பிற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து கூடுதல் உதவி கோரப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியிடமிருந்து 3 தண்ணீர் வாகனங்களும், பொள்ளாச்சி நகராட்சியிடமிருந்து 3 தண்ணீர் வாகனங்களும் பெறப்பட்டு தீயணைப்புப் பணிக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த தீயணைப்புப் பணியில் மொத்தம் 100 மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநகராட்சி ஆணையர் தலைமையில் சம்பவ இடத்திலேயே ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சியின் அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் இதர களப்பணியாளர்கள் இரவு நேரத்திலும் தொடர்ந்து பணியாற்றினர். உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டும், ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டும், கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீயணைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தீ பரவிய பகுதிகளில் Hitachi வாகனங்கள் மூலம் குப்பைகள் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டதுடன், தொடர்ச்சியாக தண்ணீர் பீய்ச்சப்பட்டு, தேவையான இடங்களில் மண் கொட்டி தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காவல் துறையின் வருண் தண்ணீர் பீய்ச்சும் வாகனம் மூலமும் தீயணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக தீ பாதித்த பகுதிகளை தனித்தனியாக பிரித்தல், தொடர்ச்சியாக தண்ணீர் பீய்ச்சுதல், மண் கொட்டுதல் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்தனர்.
நகர் நலப் பிரிவு மருத்துவ குழுவினர் 20 பேர் சுற்றுப்புறப் பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டதில், சுவாச கோளாறு தொடர்பான எந்தவிதமான பாதிப்புகளும் பொதுமக்களிடமிருந்து கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (24.08.2026) மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS அமைச்சர் சம்பத்குமார், அமைச்சர் விக்னேஷ் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் பார்வையிட்டு, தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதை உறுதிசெய்து ஆய்வு செய்தார்கள்.