கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,400 போதை மாத்திரைகள் மற்றும் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை:

குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவைபுதூர் பகுதியில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 1,400 போதை மாத்திரைகள் மற்றும் 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சல்மான் கான் (26) மற்றும் பாத்திமா சஹானா (20) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் கணவன், மனைவி என்பதும், கோவைபுதூர் தொற்றாயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.



இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...