வருவாய் தீர்வாயத்தில் பயனாளிகளின் மனுக்களுக்கு உடனடி தீர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது- கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம், பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி இன்று (17.05.2017) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பின்னர் தெரிவித்ததாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயம் நடைபெறும். இத்தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டத்திலுள்ள கிராம கணக்குகள் அனைத்தும் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் சரிபார்க்கப்படும்.



மேலும், வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது குறைகளை வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு அளித்து பயன்பெறுவர். மேற்படி மனுக்களை பரிசீலனை செய்து உரிய ஆவணங்களுடன் அளிக்கப்படும் தகுதியான விண்ணப்பங்கள் அன்றைய தினமே, தீர்வு காணப்படும். மற்றைய மனுக்கள் தொடர் நடவடிக்கைகளின் பொருட்டு பரிசீலனை செய்யப்பட்டு தீர்வுசெய்யப்படும்.

அதனடிப்படையில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய்த் தீர்வாயம் பொள்ளாச்சி வட்டத்தில் 17.05.2017 முதல் 30.05.2017 வரையும், மேட்டுப்பாளையத்தில் 17.05.2017 முதல் 23.05.2017 வரையும், பேரூர் வட்டத்தில் 17.05.2017 முதல் 25.05.2017 வரையும், கோவை வடக்கு வட்டத்தில் 17.05.2017 முதல் 24.05.2017 வரையும், கோவை தெற்கு வட்டத்தில் 17.05.2017 மற்றும் 18.05.2017 ஆகிய நாட்களிலும், கிணத்துக்கடவு வட்டத்தில்; 17.05.2017 முதல் 19.05.2017 வரையும், அன்னூர் வட்டத்தில்; 17.05.2017 முதல் 19.05.2017 வரையும், மதுக்கரை வட்டத்தில் 17.05.2017 முதல் 23.05.2017 வரையும், சூலூர் வட்டத்தில்; 17.05.2017 முதல் 23.05.2017 வரையும் என வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடத்த தீர்மாணிக்கபட்டு நடைபெற்றுவருகிறது.

மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் வட்டத்திற்கும், வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரூர் வட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர், அன்னூர் வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாச்சி வட்டத்திற்கு சார்ஆட்சியர், கோவை (தெற்கு) வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு), கோவை வடக்கு வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர், மேட்டுப்பாளையத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு), சூலூர் வட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அவர்களும், மதுக்கரை வட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்களும், கிணத்துக்கடவு வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களும், வால்பாறை வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் அவர்களும், வருவாய் தீர்வாய அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதில் மாவட்டத்தின் அனைத்து உள்வட்டங்களில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தத்தம் பகுதியைச் சார்ந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அயன் பட்டா மாறுதல், நிலச் சீர்திருத்த நிலங்கள் தொடர்பான பட்டா மாறுதல்கள், வாரிசுச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று உள்ளிட்ட இதர சான்றுகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகைகள், தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கோவை வடக்கு வட்டத்தில் வரப்பெற்ற 102 மனுக்கள் உள்ளிட்டு மொத்தம் 1021- மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, 1000 மனுக்கள் மேல் நடவடிக்ககைக்காக பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு சில மனுக்கள் பல்வேறு காரணங்களுக்கான தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளன" என மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...