துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்ட் 17, 2026 அன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துப்புரவு பணியாளர்கள் மற்றும் அனிமேட்டர்கள் உள்ளிட்ட 25 பேர் பங்கேற்றனர்.


Coimbatore: Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு பேரணி ஆகஸ்ட் 17, 2026 அன்று நடைபெற்றது.

மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 1, 2, 12, 13, 14 மற்றும் 15-க்குட்பட்ட துடியலூர் பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டது.




துடியலூர் வார்டு அலுவலகம் முதல் துடியலூர் ஆஞ்சநேயர் கோவில் வரை சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு இப்பேரணி நடைபெற்றது. வார்டு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனிமேட்டர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.




Coimbatore மாநகராட்சி 5 மண்டலங்களில் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் மாற்று பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் பூமியின் நலம், விலங்குகளின் நலம் மற்றும் நீரின் வளம் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.




துப்புரவு ஆய்வாளர் க.ஜீவமுருகராஜ் அவர்கள் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியில் சுமார் 25 நபர்களுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...