பாதசாரி மீது பைக் மோதல்: தலையில் பலத்த காயம், இளைஞர் மீது வழக்கு

கோவை தெலுங்குபாளையம் சாலையில் நடந்து சென்ற 55 வயது நாகராஜ் மீது கட்டுப்பாட்டை இழந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயம். இளைஞர் சங்கரரிதம் மீது மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Coimbatore: கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பைக் பாதசாரி மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெலுங்குபாளையம் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள முத்தையா உடையார் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (55). இவர் நேற்று முன்தினம் வாசவி மித்ரா மஹால் அருகே தெலுங்குபாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வடக்கில் இருந்து தெற்கு திசை நோக்கி செல்வபுரம் தில்லை நகர் சரோஜினி வீதியைச் சேர்ந்த சங்கரரிதம் (29) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த பைக் நடந்து சென்ற பாதசாரி நாகராஜ் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நாகராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது நாகராஜ் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாகராஜின் மனைவி கீதா (45) மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர் சங்கரரிதம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...