தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோவை மாநகராட்சி

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாநகராட்சி சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டு அலுவலகங்களிலும் துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், அனைத்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 



மாநகராட்சியின் கீழ் செயல்படும் அனைத்து நகர்நல மையங்களில் பணிபுரியும் மருத்துவ அலுவலர், செவிலியர்கள், இதர பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுடன் சேர்ந்து டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

மேலும், டெங்கு நோய் ஏற்படுத்தும் காரணிகள் குறித்த கண்காட்சி மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் முன்பு பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சியில் பணிபுரியும் 100 வார்டு துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு படம் காண்பிக்கப்பட்டது. டெங்கு நோய் குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். டெங்கு ஒழிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. 

எனவே, பொது மக்கள் அனைவரும் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் மற்றும் டிரம்களை துணிகளைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை வீட்டை சுற்றியும் போடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும், கொசு மருந்து ஊற்ற வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகுந்த ஒத்தழைப்பு நல்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...