வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை கணுவாய் பகுதியில் டர்ஃப் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் செஞ்சுரியன்ஸ் கிரிக்கெட் அணி முதலிடம் பெற்றது.


Coimbatore: முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பின் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை கணுவாய் பகுதியில் டர்ஃப் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.

வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் கடந்த மாதம் போதை ஒழிப்பு மாதமாகவும், இந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமாகவும் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை கணுவாய் அருகே உள்ள எஸ் ஆர் டி டர்ஃப் மைதானத்தில் டர்ஃப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.


தொடக்க ஆட்டத்தை வீ த லீடர்ஸ் தன்னார்வலர் ஜேபி என்கிற ஜெயபிரகாஷ் துவக்கி வைத்தார். மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியை வீ த லீடர்ஸ் பாலாஜி உத்தம ராமசாமி வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தும், டாஸ் போட்டும் தொடங்கி வைத்தார்.


இப்போட்டிகளில் கோவை மாவட்டத்திலிருந்து 12 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் தலா ஆறு வீரர்கள் எனவும், ஒரு அணிக்கு 8 ஓவர்கள் என ஒதுக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.


முதலிடத்தை செஞ்சுரியன்ஸ் கிரிக்கெட் அணி பெற்று ₹8,000 ரொக்கப் பரிசு, பரிசுக் கோப்பை மற்றும் மெடல்களைப் பெற்றது. இரண்டாவது இடத்தை ஆக்டிவ் கிங்ஸ் அணி பெற்று ₹5,000 ரொக்கப்பரிசு, பரிசுக் கோப்பை மற்றும் மெடல்களைப் பெற்றது. குப்பநாயக்கன்பாளையம் கே என் சி சி அணி மூன்றாம் இடத்தையும், வரப்பாளையம் விசிசி கிரிக்கெட் அணி நான்காம் இடத்தையும் பெற்று பரிசுக் கோப்பை மற்றும் மெடல்களைப் பெற்றன.


பரிசளிப்பு விழாவில் வீ த லீடர்ஸ் அமைப்பின் பாலாஜி உத்தம ராமசாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டியில் சிறந்த ஆட்டக்காரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் மாதமாக கடைபிடிப்பதை முன்னிட்டு, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் மரக்கன்றுகள் மற்றும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் துணிப்பைகள் வழங்கப்பட்டன.


முன்னதாக சிறப்பு விருந்தினர் முன்னிலையில் சிறுமி சஹஸ்டிரா ஆதித்யா சிலம்பம் சுற்றி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் பரணிதரன் ஜி, ராஜ்குமார் ஜி, தினேஷ் குமார் ஜி, ஜெயக்குமார், பாலகுமார், ஆனந்தகுமார், ஹரி, உதயகுமார், பரணி சவுண்ட் சர்வீஸ் சுப்பிரமணி, தடாகம் கார்த்திகுமார், சுரேஷ்குமார், தேவேந்திரன், சீனிவாசன், கோபிநாத், செந்தில்குமார், குமரன், தம்புராஜ், டி எஸ் ஏ மோகன், ஜெய் கணேஷ், மகேஷ் குமார், அரவிந்த், கமல் நாத், விகாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை எஸ் ஆர் டி டர்ஃப் நிறுவனர் ஹேமந்த் குமார் செய்திருந்தார்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...