கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (28.07.2026) செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்குவார் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை நேரடியாக மேயரிடம் அளிக்கலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை தொடர்பான பிரச்சினைகள் குறித்து முறையிடலாம்.

மேலும், தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி விவகாரங்கள், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், பெயர் திருத்தம் போன்ற நிர்வாக சேவைகள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைக்கலாம். மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த புகார்களையும் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...