கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் மைதானத்தில் நடைபெறுகிறது. 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்கின்றன.

கோவை: இந்திய ஹாக்கியின் வருங்கால சர்வதேச நட்சத்திரங்களை அடையாளம் காணும் 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் – 2026 போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு ஹாக்கி அலகு (Hockey Unit of Tamilnadu - HUT) சார்பில், ஹாக்கி இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் இந்த தேசிய அளவிலான போட்டியில், நாடு முழுவதும் இருந்து 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.



இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில்

பங்கேற்ற அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி அலகின் பொதுச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்ராஜ்குமார் பேசுகையில்,

அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி அலகின் பொதுச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்ராஜ்குமார் ஆகியோர் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.



ஜூனியர் தேசிய பயிற்சி முகாமில் இடம்பெற்றுள்ள பல திறமையான வீரர்களும் இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளதால், இந்திய ஹாக்கியின் அடுத்த தலைமுறை சர்வதேச வீரர்களை நேரில் காணும் அரிய வாய்ப்பாக இந்த சாம்பியன்ஷிப் அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



12 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், 700-க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். பங்கேற்கும் அணிகளுக்காக தங்குமிடம், போக்குவரத்து, மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் போட்டிகளை இலவசமாகக் கண்டு, இந்திய ஹாக்கியின் வருங்கால நட்சத்திரங்களை உற்சாகப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...