உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உண்டியல் காணிக்கை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில்,விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்.

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயிலில் 9 நிரந்தர உண்டியல்களும், 6 தற்காலிக உண்டியல்களும் உள்ளன. கடந்த ஜூலை 15-ஆம் தேதி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், தற்காலிக உண்டியல்களில் ஒன்றில் இருந்த காணிக்கைத் தொகை கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதுதொடர்பாக சென்னை இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்திற்கும் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகார் மற்றும் ஆய்வு குறித்து துறை ரீதியாக அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...