கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் உள் விளையாட்டு வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வார்டு எண் 33க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் உள் விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகள் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த வளாகம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகிறது.



இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இன்று (13.07.2026) இந்த பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாக கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்த அவர், பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த வளாகம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சி மையமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, மாநகராட்சி ஆணையர் வடக்கு மண்டலம் வார்டு எண் 20க்கு உட்பட்ட K.R.G. நகர் பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், அங்கு மாநகராட்சி பூங்கா அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவாக தொடங்கிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 20க்கு உட்பட்ட பூம்புகார் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் ஆழ்க்குழாய் கிணறு அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், வார்டு எண் 75க்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் ABC Centre (வீடில்லா நாய்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மையம்) செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தெருநாய்களுக்கான சிறப்பு வெறிநோய் தடுப்பூசி (Anti-Rabies Vaccination-ARV) செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர்கள் Mohanasundari, Narmada, உதவி செயற்பொறியாளர்கள் Sathiyamurthy (பொ), Savitha, மாநகராட்சி கால்நடை மருத்துவர் Varun Kumar, மண்டல சுகாதார அலுவலர்கள் Murugan, Radhakrishnan, உதவி பொறியாளர்கள் Sakthivel, Karthikeyan, சுகாதார ஆய்வாளர்கள் Rajendran, Saranya உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...