அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால், அதிமுகவில் உள்கட்சி பரபரப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.


கோவை: 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகள் கட்சித் தலைமை வழங்கிய பதவிகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கட்சித் தலைமையின் செயல்பாடுகள், தொண்டர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டனர். சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சிக் கட்டளையை மீறி வாக்களித்ததாகக் கூறி, அவர்கள் வகித்து வந்த கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் கட்சியில் இருந்து விலகிய நிலையில், கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து எம்.எஸ்.எம்.ஆனந்தனும் கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழலில், கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டிருந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எனினும், எஸ்.பி.வேலுமணி கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாகவும், அந்தப் பதவிக்கு பதிலாக பொள்ளாச்சி ஜெயராமன் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட கட்சிப் பதவி தேவையில்லை என எஸ்.பி.வேலுமணி அண்மையில் பேசியதாக வெளியான வீடியோவும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி உள்ளிட்டோர், "நாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாகவே தொடர்வோம். ஆனால், கட்சி வழங்கியுள்ள பதவிகளை ஏற்று செயல்பட இயலாத சூழ்நிலையை கட்சித் தலைமையே உருவாக்கியுள்ளது" என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், ஏற்கனவே பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புசார் சவால்களை எதிர்கொண்டு வரும் அதிமுகவில் உள்கட்சி குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...