கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட புதிய டயாலிசிஸ் மையம் ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 நோயாளிகள் இலவசமாக பயனடைந்து வருகின்றனர் என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சீத்தாலட்சுமி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிறுநீரக நோயாளிகளுக்கான புதிய டயாலிசிஸ் மையம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்ட இந்த மையத்தில் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட பொதுமக்கள் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினரால் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் இரு வேலைகளில் 20 நோயாளிகள் இந்த மையத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழலில் இயங்கி வரும் இந்த மையத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையம் செயல்படுகிறது.

பொதுமக்கள் 9498599703, 9159557631 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...