கோவையில் மூன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு அலுவலகங்களில் ஆவணங்கள், கணக்குப் பதிவுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகாரா? அல்லது ஆவணங்கள் சரிபார்ப்பு சோதனையா? என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த திடீர் சோதனையால் பத்திர பதிவு அலுவலங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சுப முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதனால் , சுபமூர்த்த நாளான இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகிறதா, விதிமுறைகளை மீறி பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. லஞ்சப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




கோவை மாவட்டத்தை பொறுத்தவரைதொண்டாமுத்தூர், சரவணம்பட்டி மற்றும் ரெட்பீல்டு பகுதிகளில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.




தொண்டாமுத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் DSP, Inspector உள்ளிட்ட ஆறு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, அலுவலக ஆவணங்கள், கணக்குப் பதிவேடுகள் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான விவரங்கள் விரிவாக சரிபார்க்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






அதேபோல, சரவணம்பட்டி காவல் நிலையச் சாலையில் அமைந்துள்ள காந்திபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் மற்றும் ரெட்பீல்டு பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரிவான சோதனையில் ஈடுபட்டனர்.




மூன்று அலுவலகங்களிலும் பல மணி நேரங்களாக சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோவையில் முக்கியபத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த திடீர் சோதனையால்

பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சோதனை குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...