சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீசார் ஐந்து நாட்கள் கோரியிருந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் மோகன்ராஜை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.




இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம் தொடர்பான மேலும்தகவல்களை சேகரிக்கும் நோக்கில் இருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சூலூர் போலீசார் கோவை POCSO நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.




இதையடுத்து, கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள POCSO நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பகவதி அம்மாள், நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனி அறையில் இருவரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், காவல்துறை தரப்பில் ஐந்து நாட்கள் காவல் கோரப்பட்டிருந்த நிலையில், மூன்று நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.




முன்னதாக, இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் இருந்து தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், சம்பவத்தன்று சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படும் கார்த்திக் மற்றும் மோகன்ராஜை சாட்சிகள் அடையாளம் காட்டியிருந்தனர்.




சம்பவம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், காவல் விசாரணையின் போது கூடுதல் ஆதாரங்கள், சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றத்தில் தொடர்புடைய பிற விவரங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...