கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தினார். மாவட்ட அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.


தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவையில் இன்று பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

முன்னதாக, நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள விளையாட்டு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை பார்வையிட்டார்.



அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், துறையின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.



கூட்டத்தில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்ற நிலையை அமைச்சர் ஆய்வு செய்து, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இதையடுத்து, திட்டங்கள் விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றப்படுவதற்கான தேவையான வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு வழங்கிய அமைச்சர், பணிகளை காலக்கெடுவிற்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மாவட்ட வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...