கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ(எம்) கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறும் கோவை அரசு மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளில் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறுநீரகவியல் துறையில் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் கழிவறைகள் மிகக் குறைவாக உள்ளதுடன், அவையும் போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு கூடுதல் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, சிபிஐ(எம்) கோவை மாவட்டக் குழு சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாஞ்சலியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மருத்துவக் கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது சிபிஐ(எம்) கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே.எஸ். கனகராஜ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...