கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வேன் டிரைவரை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை:

பெங்களூருவில் வேலை செய்து வரும் பெண், தனது 6 வயது மகளை கோவையில் உள்ள தனது பெற்றோருடன் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில், கோடை விடுமுறைக்காக சிறுமியை பெங்களூருவிற்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை சிறுநீர் கழிக்கும் போது வலி இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தையிடம் தாய் விசாரித்தபோது, முதலாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் பள்ளி மைதானத்தில் வைத்து வேன் டிரைவர் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

மேலும், யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் சிறுமியை மிரட்டி, சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், பெங்களூருவில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் கோவை புலியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பள்ளி வேன் டிரைவர் கணேசனை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...