FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை:

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், போதைப்பொருட்களின் அதிகரிப்பும் இளைஞர் சமுதாயத்தை கடுமையாக பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநில அரசே மதுக்கடைகளை நடத்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எளிதில் கிடைத்ததும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டை மதுவும் போதையும் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், அதற்காக படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து முழுமையான மதுவிலக்கு நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது, அவை உட்புற சாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு பல இடங்களில் சட்டவிரோத “சந்து கடைகள்” உருவாகியதாகவும், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத மதுவிற்பனை மையங்கள் இயங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல், கடந்த ஆட்சியில் FL2 உரிமம் மூலம் மனமகிழ் மன்றங்கள் மற்றும் சமூக கிளப்புகளுக்கு வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிகள் சமூக சீரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இளைஞர்களிடையே மது அருந்துவதை சமூக அந்தஸ்தாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, சமூக நலனை கருத்தில் கொண்டு FL2 மதுபான உரிமங்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகள், அவற்றின் வருவாய் மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...