குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்து குறிச்சி குளத்திற்கு செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். மழைநீர் தடையின்றி செல்ல 3.27 கி.மீ நீளத்தில் ஆகாயத்தாமரை, புதர்கள் அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar மற்றும் மாநகராட்சி ஆணையாளர்மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.






தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைக்காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






அந்த வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சி, நொய்யல் ஆறு குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் புட்டுவிக்கி சாலையில் அமைந்துள்ள நீர் வரத்து கால்வாயில், மழைக்காலங்களில் தங்குதடையின்றி நீர் செல்லும் வகையில் சுமார் 3.27 கி.மீட்டர் நீளத்திற்கு கால்வாய் பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.




இந்த ஆய்வின்போது, உதவி ஆணையர் தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் செல்வி விசாலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...