மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டவர்களில் 9 பேர் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 9 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்ற மாணவர் 1050 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் ராமநாதன். ராமநாதன் 3-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை இடை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் துணி நூல்களை எடுக்கும் (பிசிறு வெட்டுதல்) வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோவையை சேர்ந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள் ராமநாதன மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர்.

தொடர்ந்து படித்து வந்த ராமநாதன் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு தேர்விற்கான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் ராமநாதன் ஆயிரத்து 50 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

இதுகுறித்து, ராமநாதன் கூறுகையில், குழந்தை தொழிலாளிகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டுமென்பதே தனது விருப்பம். குழந்தை தொழிலாளியாக உள்ளவர்கள் தன்னைபோல மீண்டு வரவேண்டும். 

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பாடத்தை தேர்வு செய்ய உள்ளேன். தமிழாசிரியராக வரவேண்டும் என்பதே தனது விருப்பம்" என்றார்.

குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட ராமநாதன் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து மாணவர்களின் தன்னம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டதாக ராமநாதனின் ஆசிரியர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தொழிலாளியாக இருந்தால் அவர்களை மீட்டு மறுவாழ்வும், கல்வியும் வழங்கி வருவதாகவும், மாணவர்கள் தொடர்ந்து படிக்க உயர் கல்விக்கான உதவித் தொகையும் அரசு வழங்கி வருவதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருவதாகவும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.

கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக வறுமையை கடந்து அசத்தியுள்ள ராமநாதன், மற்ற மாணவர்களுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார் என்றால், அதுமிகையல்ல.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...