உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள முரீது பாபா தர்காவில் 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது.



உரூஸ் கந்தூரி விழா என்பது இஸ்லாமிய சூபி ஞானிகளின் நினைவு நாளில் தர்காக்களில் கொண்டாடப்படும் புனித விழா ஆகும்



இந்த விழா கடந்த மாதம் 19ஆம் தேதி தாஹிர் ஷா வலியல்லாஹ் தர்கா வளாகத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக மவ்லீது ஒதப்பட்டு, இஸ்லாமிய பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆன்மீக உரைகள் நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து கந்தூரி எனப்படும் அன்னதானம் நடைபெற்றது. மேலும் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ‘சந்தன உருஸ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக சந்தனக்குடம் முரீது பாபா தர்காவிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு சந்தனம் மற்றும் தப்ரூத் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சைய்யத் சுல்தான் ஷா காதிரி (சஜ்ஜாதா நஷீன்), எம். மூசா, காதிரி, கா. அப்பாஸ், அசன் பாஷா, அபூபக்கர் உள்ளிட்ட உலமாக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...