கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,181 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.


Coimbatore:

கோவை: 2026–2027 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

சுமார் 5,500 மையங்களில் 22.80 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 9.47 லட்சம் மாணவர்கள் மற்றும் 13.33 லட்சம் மாணவிகள் என மொத்தம் 22.80 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள், ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்துகிறது.

கோவையில் 16 தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை: சூலூர் பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா, அவிநாசி சாலை சி.ஜி.டி கல்லூரி, பீளமேடு பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளி, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி, சிவில் ஏரோ பி.எஸ்.ஜி கல்லூரி, சுங்கம் நிர்மலா கல்லூரி, ஜி.என் மில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அசோகபுரம் அரசு மாதிரி பள்ளி, ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, பாரதி பார்க் அவிநாசிலிங்கம் கல்லூரி உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

அதன்படி, 2026–27 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும். தேர்வு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்போன், கை கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், மாணவர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...