140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என உறுதியாக தெரிவித்தார்.


கோவை: இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் சூழல் குறித்து விரிவாக கருத்து தெரிவித்தார்.



“இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு. மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நிலை கொண்டுள்ளது. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று முதல் நாளிலிருந்தே கூறி வருகிறோம். ஒரு நாள் இரவில் முடிவுகள் மாறுவதற்கோ, மக்கள் மனநிலை மாறுவதற்கோ வாய்ப்பு இல்லை,” என்றார்.

தி.மு.க.க்கு சாதகமாக கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன என்ற கேள்விக்கு, “எவ்வளவு இடங்கள் கூறுகிறார்கள்? நாங்கள் கூறுவது 200-க்கும் மேல். அதையே கருத்துத் திணிப்பு என்று சொல்கிறோம். எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி,” என பதிலளித்தார்.

கருத்து மாறுபாடுகள் குறித்த கேள்விக்கு, “எங்களது கருத்து ஒரே மாதிரி தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி நடந்துள்ளது. எங்கள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பிரச்சாரம் செய்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் சென்று உழைத்துள்ளார். இந்த உழைப்பு வீண் போகாது. மக்கள் யார் ஆட்சி செய்ய வேண்டும், யார் செய்யக்கூடாது என்பதை தீர்மானித்து உள்ளனர். அதனால் 200-க்கும் மேல் வெற்றி என்பது எங்கள் நிலைப்பாடு,” என்றார்.

மேலும், “140க்கு மேல் ஒத்துக்கொள்ள மாட்டோம்; 200க்கு மேல் வெற்றி பெறுவோம் – அதுதான் எங்களது பார்வை,” என்றும் உறுதியாகக் கூறினார்.

பா.ஜ.க மீது குற்றச்சாட்டு முன்வைத்து, “ஒவ்வொரு தேர்தலிலும் விலை உயர்வை தாமதப்படுத்தி, தேர்தல் முடிந்ததும் உயர்த்துவது வழக்கமாகிவிட்டது. இதை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர்,” எனவும் விமர்சித்தார்.

கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு கட்சியிலும் மனக்குமுறல்கள் இருக்கும். வாய்ப்பு கிடைக்காதவர்கள் போராட்டம் நடத்துவது இயல்பானது,” என்றார்.

மொழிபெயர்ப்பு குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “நாங்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள். எங்களால் முடிந்த அளவில் மொழிபெயர்க்கிறோம். இதை பாராட்டாமல் விமர்சிப்பது சரியல்ல,” என்று கூறினார்.

“இன்னும் 24 மணி நேரம் உள்ளது. நாளை ஒரு நாள் தான் உள்ளது. அதன் பிறகு அனைவரும் சந்தித்து பேசுவோம்,” என்று தெரிவித்த அவர், மொத்தத்தில், வரவிருக்கும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...