கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பிடித்து, அவரிடமிருந்த ரொக்கப் பணத்துடன் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது பணப்பட்டுவாடா புகார்களால் சூடுபிடித்துள்ளது.



இந்நிலையில், இன்று காலை கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி வீதி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அப்பகுதியில் இருந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் கவனித்தனர்.

அவரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அருகிலிருந்த சாலைவழியாக தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயிரிட்டேரி, புதுப்பாலம் அருகே அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, அவர் கரூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

அவரது பையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கூட்டணி கட்சியினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், பணத்தையும் அந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கோவை வடக்கு தொகுதியில் கரூரில் இருந்து வந்த குழுவினர் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுகின்றனர் என ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...