கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான டோக்கன்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான டோக்கன்களை வழங்கி வருவதாக தகவல் கிடைத்தது.



இதையடுத்து, அங்கு சென்ற திமுகவினர், டோக்கன்கள் வழங்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் கையும் களவுமாக பிடித்து, அந்த டோக்கன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த டோக்கன்கள், அதிமுக முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் குமார் தலைமையில் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், கவுண்டம்பாளையம் தொகுதியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் பிஆர்ஜி அருண்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சூரியகுமார்போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...