வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Coimbatore: வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் இன்று ஏற்பட்ட கோர விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 8 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

முதற்கட்ட தகவலின்படி, கேரள மாநிலம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 13 பேர் டெம்போ டிராவலர் வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து மீண்டும் கீழிறங்கி வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

மலைப்பாதையின் 13வது கொண்டை ஊசி வளைவை கடக்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து வழுக்கி பள்ளத்தில் கவிழ்ந்து, 9வது கொண்டை ஊசி வளைவு நோக்கி சரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 5 பேர் கடுமையாக காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கோடைக்கால சுற்றுலா துவங்கியுள்ள நிலையில், மக்களிடையே இந்த விபத்து பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “விபத்து செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடையவும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...