“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்.



அப்போது, காங்கேயம் தொகுதியில் எம்.பி சாமிநாதன் மற்றும் தாராபுரம் தொகுதியில் மருத்துவர் இந்திராணி ஆகியோர் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.



பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காங்கேயம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வட்டமலைக்கரை அணைக்கு ரூ.15 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம், ரூ.6 கோடி மதிப்பிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிவன்மலைக்கு சாலை வசதி, காங்கேயம் காளை சிலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.



பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, மாணவர்களுக்கு மடிக்கணினி, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.2000, கல்வி ஊக்கத்தொகை, முதியோர் உதவித்தொகை உயர்வு, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அவர், “எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை. அந்த அனுபவம் எனக்கு தேவையுமில்லை” என பதிலடி கொடுத்தார்.

மேலும், “இந்த தேர்தல் தமிழ்நாடு Vs டெல்லி என்ற நிலைமையில் உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து டெல்லி புறக்கணிக்கிறது. அதற்கு மக்கள் தேர்தலில் சரியான பதில் அளிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...