தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பிரச்சாரம்.


Coimbatore: கடந்த ஐந்து ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் எந்த ஒரு பிரச்சனையும் தீர்த்து வைக்கப்படவில்லை என தெரிவித்த அர்ஜுன் சம்பத், குறிப்பாக உப்பாற்றில் வருடத்திற்கு ஒருமுறையாவது நீர் கொண்டு வந்து பாசனம், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்காக பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திராவிட மாடல் அரசு தொடர்ந்து கொங்கு மண்டலத்தை வஞ்சித்து வருவதாக கூறினார்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பிற்கு பேசிய அவர், திமுக அரசு தாராபுரம் தொகுதி வளர்ச்சிக்கு எவ்வித முயற்சிகளையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், இந்தப் பகுதியில் குறிப்பாக மூலனூர் பகுதியில் அதிக அளவில் முருங்கை சாகுபடி நடைபெற்று வருகிறது. குட்டை முருங்கைக்காய் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் இந்த பகுதியின் விவசாயிகளுக்கு ஆதரவாக, முருங்கைக்காய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அதை பாதுகாக்கும் வகையில் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கவும் வாய்ப்பு இருந்தபோதிலும், அதற்கான எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என விமர்சித்தார்.

தொகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு திட்டத்தைக் கூட செயல்படுத்தாத இந்த அரசு, அதற்கு பதிலாக அதிக அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். திமுக வெற்றி பெற்று அமைச்சரவை பதவி வகித்தபோதும், தாராபுரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்காத நிலை தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், பல இடங்களில் சைட் ஒதுக்கீட்டில் பல நூறு கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இந்த ஊழல் குறித்து தெரிந்திருந்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் உள்ளாட்சித் துறை “கலெக்ஷன் கரப்ஷன்” என விமர்சிக்கப்படும் நிலையில், அதே நிலை தாராபுரத்திலும் நிலவுகிறது எனவும் கூறினார்.

இத்தகைய சூழலில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்றும், தாராபுரம் எப்போதுமே இரட்டை இலை கோட்டை எனவும், திராவிட மாடல் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். அந்த ஆட்சியின் கொடுமைகளை அனுபவித்த பிறகே மக்கள் அதிமுக ஆட்சி திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

நிச்சயமாக இந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயல்படுத்தப்பட்ட “முத்ரா” கடன் திட்டத்தை திமுக அரசு தங்களுடைய திட்டமாக காட்ட ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி வருகிறது என்றும் குற்றம்சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படாமல் தடுக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

தற்போது தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்றும், இந்த தேர்தலில் மாற்றம் நிச்சயம் நடைபெறும் எனவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...