வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். கோவை-ஷொரணூர் பயணிகள் ரயில் ஏப்ரல் 12 மற்றும் 17ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


Coimbatore: பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், கோவையிலிருந்து இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, சில ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வாளையாறு பகுதியில் உள்ள ரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஏப்ரல் 11 மற்றும் 14ஆம் தேதிகளில் கோவை - மங்களூரு சென்ட்ரல் நிலையம் ரயில் (எண்: 16323) 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஏப்ரல் 11, 14, 19ஆம் தேதிகளில் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் காரணமாக கோவை - ஷொரணூர் பயணிகள் ரயில் (எண்: 56603) ஏப்ரல் 12 மற்றும் 17ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவைக்காக மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் தங்களது பயண திட்டங்களை இதனை கருத்தில் கொண்டு மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...