மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC, VMC இயந்திர Hour Rate கட்டணங்களை 15-30 சதவீதம் உயர்த்த TAGCT, CODMA தொழில் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றின. உற்பத்தி நிறுவனங்கள் கட்டணத்தை ₹300-ல் இருந்து ₹130 வரை குறைத்ததால் தொழில் முனைவோர் பாதிப்பு.


Coimbatore: மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து 'டாக்ட்' தொழில் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, கோவையில் 'ஜாப் ஒர்க்'செய்யும் தொழில் முனைவோர் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான குறுந்தொழில் முனைவோர் 'சிஎன்சி', 'விஎம்சி' இயந்திரங்களை வங்கிகளில் கடன் மூலம் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அனைவருக்கும் 'ஜாப் ஒர்க்'கிடைக்காத சூழ்நிலையை பயன்படுத்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் 'சிஎன்சி' இயந்திரங்களுக்கு Hour Rateகட்டணத்தை 300 ரூபாய்க்கு 130 ரூபாய் வரை கட்டணத்தை குறைத்து கொடுப்பதால் 'ஜாப் ஒர்க்' செய்யும் தொழில் முனைவோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர் 'ஜாப் ஒர்க்' தொழில் முனைவோருக்கு உரிய முறையில் இயந்திர கட்டணத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். இது தொடர்பாக எங்கள் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



'காட்மா' தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறும்போது, மூலப் பொருட்களை விலை உயர்வு, வரி அதிகம் செலுத்துதல், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வாடகை அதிகம் நிர்ணயிக்கப்படுவது,தொழிலார்களுக்கான ஊதியம் அதிகரித்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் குறுந்தொழில் முனைவோருக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஜாப் ஒர்க்' அடிப்படையில் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் லாபம் இல்லாத நிலையில் செயல்பட்டு வரும் அவல நிலை காணப்படுகிறது.

எனவே 'ஜாப் ஒர்க்' தொழில் நிறுவனங்கள் இயந்திரங்களுக்கான 'Hour Rate' 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தினால் மட்டுமே தொழிலில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் அலுவலகத்தில் நடந்தகூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 

மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...