கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வரிடம் மனு

ஈரோட்டில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதியின்படி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என மனு அளித்தனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற நெசவாளர் நல கோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுக்கொண்டனர்.


Erode: தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கந்தவேல், கருணாநிதி ஜெகநாதன் ஆகியோர் ஈரோட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி, மனு அளித்துள்ளனர்.




தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கந்தவேல் கூறுகையில், "ஈரோட்டுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினோம். தொடர்ந்து அவரிடம் மனு அளித்தோம். திமுக தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் நெசவாளர் நலனுக்காக 16 கோரிக்கைகள் மற்றும் சிறு, குறு தொழில் தொடர்பான திட்டங்களும் ஜவுளித்துறையில் அதிகம் உள்ள சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு முதல்வரிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.




"கடந்த ஐந்து ஆண்டுகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் சாதா விசைத்தறிகளை நாடா இல்ல விசைத்தறிகளாக நவீனப்படுத்த முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று கூறினார்.




"திமுக தேர்தல் அறிக்கையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த இலவச மின்சார அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பை தேர்தல் வாக்குறுதியாக வெளியீடு செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் வலியுறுத்தியுள்ளோம்" என்று தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கந்தவேல் தெரிவித்துள்ளார்.




தமிழக அரசின் நெசவாளர் நல திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இலவச மின்சார வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என நெசவாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...