கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், skating செய்தவாறு பங்கேற்றனர். வாக்குவீரன் இருவாச்சி பறவையும் இடம்பெற்றது.


Coimbatore: ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.

வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு சார்பிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், சிலம்பம் மற்றும் skating செய்தவாறும் பேரணி மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்த வாக்கத்தான் நிகழ்வில் தேர்தல் அடையாளச் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட வாக்குவீரன் இருவாச்சி பறவையும் இடம்பெற்றிருந்தது.

தேர்தல் நாளன்று அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும், முதல் முறை வாக்களிப்பவர்கள் நன்கு சிந்தித்து கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர். அப்போதுதான் சிறந்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் இளைஞர்களிடையே வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...