தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran இன்று (23.03.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டம், 118-கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெற்றது.





இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இப்பேரணியானது அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் துவங்கி தடாகம் சாலை வழியாக N.S.R சாலை சந்திப்பு வழியாக மீண்டும் அரசு தொழில்நுட்பக் கல்லூரியினை வந்தடைந்தது. இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக, கல்லூரி வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தினை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்து, செல்ஃபி முகப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



இந்நிகழ்வுகளின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் நர்மதா, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் Dr Manomani, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், உதவி பொறியாளர் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், சலைத், கமலக்கண்ணன், சரண்பாண்டியன், கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...