உடுமலையில் தமிழக வெற்றி கழகம் ஆலோசனைக் கூட்டம்: 2026-ல் விஜய் முதல்வராவார் என தீர்மானம்

உடுமலையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், 2026-ல் விஜய் தமிழக முதல்வராவது உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை நகர தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆவது உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்து தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெறவுள்ள முதல் மாநாடு குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் திருமலை, மாணவரணி தலைவர் ஹரிஹரன், உடுமலை நகர நிர்வாகிகள் காஜா, பிரபு, சந்திரன், பிரேம்குமார், சையது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடுமலை, குடிமங்கலம், உடுமலை தெற்கு ஒன்றியம், குடிமங்கலம் வடக்கு ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றிய மகளிர் அணி, உடுமலை தெற்கு பகுதி மகளிர் அணி மற்றும் உடுமலை நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு முன்னதாக, காமாட்சி அம்மன் கோவில், விநாயகர் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் விழுப்புரம் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.கே. சங்கர், "விழுப்புரத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டுக்கு கூட்டம் அதிகமாக வரும் நிலையில், அரசின் விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது," என்றார்.

மேலும் அவர், "தற்சமயம் தமிழக மக்களுக்காக வாழும் நல்ல தலைவராக விஜய் உள்ளார். மாற்றுக் கட்சி சார்ந்த பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் விஜய் கட்சிக்கு வர தயாராக உள்ளனர். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வர் ஆவது உறுதி," என்று தெரிவித்தார்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...