அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைப்பு: நிதி பற்றாக்குறை காரணமாக தாமதம் - அமைச்சர் சாமிநாதன்

உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக திட்டம் தாமதமாகியுள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எரி சாராய உற்பத்தியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சு. கயல்விழி செல்வராஜும் கலந்து கொண்டார்.

தற்போது வடிப்பாலையின் மூலப்பொருளான 3,507 மெட்ரிக் டன் கழிவுப்பாக இருப்பில் உள்ளதாகவும், இதன் மூலம் 7,89,075 லிட்டர் எரி சாராயம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்திற்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக இயக்க சுமார் 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கூறினார். பல ஆண்டுகளாக இயந்திரங்கள் பழுதடைந்து, தேய்மானம் அடைந்துள்ளதால் புதிதாக மாற்றி அமைக்க வேண்டியுள்ளதாகவும், தற்போதைய நிதி பற்றாக்குறை காரணமாக ஆலையை பராமரிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

நிதி கிடைக்கும் பட்சத்தில் படிப்படியாக மீண்டும் கரும்பு அரவையை செய்வதற்கான வாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

கடந்த சில மாதங்களாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயந்திரங்கள் பழுது காரணமாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆலைக்கு நிதி ஒதுக்க வேண்டுமென்று பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அமைச்சர் சாமிநாதன் தற்போது நிதி இல்லை என்று கூறியதற்கு விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆலையை விரைவில் புனரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...