மக்கள் குறைதீர் கூட்டத்தில் 2 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 2 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 

தொடர்ந்து, இம்முகாமில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணத் தொகையாக 2 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலை, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் ஆதிதிராவிட நலத்துறையின் மூலமாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா, துணை ஆணையர் (கலால்) வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், ஆதி திராவிட நல அலுவலர் மோகன் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...