கோவையில் 250 வகை கீரை மற்றும் மூலிகைகள் கண்காட்சி: பொதுமக்களுக்கு இலவச அனுமதி

கோவை துடியலூரில் KEERAIKADAI.COM அமைப்பு நடத்தும் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 250 வகை கீரைகள், மூலிகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றின் மருத்துவ குணங்கள் விளக்கப்படுகின்றன.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அடுத்த NGGO காலனியில் உள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் KEERAIKADAI.COM அமைப்பினர் நடத்தும் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 250 வகை கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றின் மருத்துவ குணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.



கல்லூரி மாணவ மாணவிகள் கீரைகள் குறித்தும் அவற்றின் மருத்துவ பலன்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.



இந்த கண்காட்சியில் நாம் பெரும்பாலும் உணவில் எடுத்துக் கொள்ளும் கீரைகள் உட்பட பல்வேறு கீரைகள், மூலிகைச் செடிகள், விஷம் முறிக்கும் மூலிகை செடிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசமாகும். QR கோட் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். பெரும்பாலான பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்களும் வருகை புரிந்து கீரைகள் மற்றும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து கொள்கின்றனர்.

KEERAIKADAI.COM நிறுவனர் ஸ்ரீராம் பிரசாத் கூறுகையில், "பொதுமக்கள் கீரைகள் மற்றும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து கொள்ளவே இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு காலத்தில் 500 வகையான கீரைகள், மூலிகை செடிகளை உட்கொண்டு வந்த நிலையில் தற்போது பெரும்பாலானோர் அதனை மறந்து விட்டனர். இது குறித்து பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கண்காட்சியை நடத்துகிறோம்" என்றார்.

மேலும் அவர், "சென்னையில் இதுபோன்ற கண்காட்சியை நடத்த திட்டமிட்டு வருகிறோம். அதில் 500க்கும் மேற்பட்ட கீரை மற்றும் மூலிகை செடிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம். பொதுமக்கள் கீரை மற்றும் மூலிகைச் செடிகளை வாங்க விரும்பினால் எங்களது KEERAIKADAI.COM இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

"எங்களிடம் இருக்கும் கீரைகள் இயற்கை விவசாயம் சார்ந்த தயாரிக்கப்படுகின்றன. பூச்சி கொல்லி மருந்துகள் எதுவும் சேர்க்கப்படாமல் உப்பு, மஞ்சள் தூள், மிளகு ஆகியவற்றையே பூச்சி கொல்லிகளாக பயன்படுத்துகிறோம். தற்பொழுது உள்ள இந்த கண்காட்சியில் பெரும்பாலானவை காட்சி பொருள்களாகவே மாறிவிட்டன. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...