கோவை மத்திய சிறை இடமாற்றம்: விரிவான திட்ட அறிக்கை தயார் - சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

கோவை மத்திய சிறையை பிளிச்சி பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 95 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைக் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன.


Coimbatore: கோவை மத்திய சிறையை இடமாற்றம் செய்யும் திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை நஞ்சப்பா சாலையில் செயல்பட்டு வரும் மத்திய சிறையை இடமாற்றம் செய்துவிட்டு, இந்த வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது. சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கரில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன.

இதற்கிடையே பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் செம்மொழிப் பூங்கா வளாகம் கட்டுமானப் பணி கடந்தாண்டு இறுதியில் தொடங்கி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், சிறை வளாகத்தின் மற்றொரு பகுதியில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரமடை அருகே பிளிச்சி என்ற பகுதியில் சிறை வளாகம் கட்ட போதிய இடம் இருப்பது கண்டறியப்பட்டு, சிறை வளாகத்துக்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாாிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மத்திய சிறைத்துறை உயரதிகாரிகள் கூறும்போது, "சிறைச்சாலையை ஒட்டிய இடங்களில் அடுத்தடுத்து திட்டப்பணிகள் தொடங்குவதால் சிறைச்சாலையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பிளிச்சி பகுதியில் சிறைச் சாலை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 95 ஏக்கர் பரப்பளவில் சிறைக் கட்டிடங்கள் கட்டப்படும்" என்றனர்.

மேலும் அவர்கள், "கைதிகள் தங்குவதற்கான கட்டிடங்கள், அவர்கள் பணிபுரியும் தொழிற்கூட கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் இடம்பெறும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பு வெளியானதும், கட்டுமானப் பணிக்கு தேவையான தகுந்த நிறுவனம், தொடர்புடைய துறையின் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...