வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலை 6 மணிக்குப் பின் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலக்குடி - வால்பாறை சாலையில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைக் காண, மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி வாகனங்களை வழிமறிப்பதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

கடந்த மாதங்களில் 'கபாலி' என்ற யானை இச்சாலையில் முகாமிட்டு வாகனங்களை விரட்டியது. தற்போது கடந்த சில நாட்களாக 'கணபதி' என்று வனத்துறையால் பெயரிடப்பட்ட ஒற்றை யானை அடிக்கடி சாலையில் நடமாடுவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

வால்பாறை, மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையில் வனப்பகுதியை ஒட்டியே சாலை அமைந்துள்ளதால், யானைகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன. எனவே, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாலை 6:00 மணிக்குப் பின் அதிரப்பள்ளி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் நேற்று (அக்டோபர் 4) அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...