பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை மையம் திடீர் மூடல்: பயணிகள் அவதி

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பொதுமக்களும், ரயில்வே நல சங்க நிர்வாகிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமான பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை, வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.



ரயில் நிலையத்தில் இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டது.



இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான வால்பாறை பகுதிக்கும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் இருந்த போதும், பயணிகள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. மேலும், தென் மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், பொதுமக்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திடீரென ஒரு முன்பதிவு சேவை மையத்தை ரயில்வே நிர்வாகம் மூடியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால், மூடப்பட்ட முன்பதிவு சேவை மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று ரயில்வே நல சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...