கோவை ஈஷா மையத்தில் விசாரணை நிறைவு; நாளை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்தது. அறிக்கை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கோவை எஸ்.பி கார்த்திகேயன் அறிவித்தார்.


Coimbatore: கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்ததாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். விசாரணை குறித்த அறிக்கை நாளை (அக்டோபர் 4) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 குழுக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈஷா மையத்தில் விசாரணை மேற்கொண்டன.

விசாரணையின் போது, ஈஷா மையத்தில் உள்ள அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்பவர்களின் விசா உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ஈஷா பள்ளி வளாகத்தில் தங்கிப் படிக்கும் குழந்தைகளிடமும், துறவறம் பெற்றுள்ள பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இரண்டாவது நாள் விசாரணையில் சுகாதாரத் துறையினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மனநல ஆலோசகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஈஷா மையத்தின் மீதுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளும் ஆய்வு செய்யப்பட்டதாக எஸ்.பி. கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஈஷா யோகா மையம் தொடர்பான அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும், ஈஷா மையம் கொடுத்திருக்கும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் எஸ்.பி. கார்த்திகேயன் கூறினார். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அரசுத் துறை வாகனங்கள் ஈஷா மைய வளாகத்திலிருந்து வெளியேறின.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...