கோவையில் கனிமொழி உதவியாளரின் தம்பி எனக் கூறி போலீசாரை மிரட்டிய இளைஞர்கள்

கோவை காந்திபுரத்தில் போலீஸ் சோதனையின் போது, மது போதையில் இருந்த இளைஞர்கள் கனிமொழியின் உதவியாளரின் தம்பி எனக் கூறி காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அக்டோபர் 1 அன்று இரவு நடைபெற்ற வாகன சோதனையின் போது, மது போதையில் இருந்த இளைஞர்கள் கனிமொழியின் உதவியாளரின் தம்பி எனக் கூறி காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்திபுரம் 100 அடி சாலையில் அக்டோபர் 1 அன்று இரவு போலீசார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சில இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையின் போது, அந்த இளைஞர்கள் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது.

மது போதையில் இருந்த அந்த இளைஞர்கள், தாங்கள் திமுக எம்பி கனிமொழியின் உதவியாளரின் தம்பி என்று கூறி காவல்துறையினரை மிரட்ட முயன்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...