கோவையில் விவசாயிகள் 100 நாள் தொடர் போராட்டம் தொடக்கம்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை கோரிக்கை

கோவை சூலூரில் விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி 100 நாள் தொடர் போராட்டம் தொடங்கியுள்ளனர். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.


கோவை: கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் 65 சதவீத விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பியும் அதனை சார்ந்த தொழில்களை நம்பியும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் விவசாயிகள் 65 சதவீதத்திற்கும் மேலாக உள்ளனர்.

தேங்காய் எண்ணெயை தமிழக அரசால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என கால் நூற்றாண்டு காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை எந்த அரசும் செயல்படுத்தவில்லை என விவசாயிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் 100 நாட்கள் 100 ரேஷன் கடை முன்பாக போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் நேற்று (அக்டோபர் 1) சூலூரில் தொடங்கியுள்ளது.

Newsletter

வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்களை மிரட்டியதாகப் புகார்: 10 தவெகவினர் மீது வழக்குப்பதிவு

செப் 24-ஆம் தேதி, தவெகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட 10 பேர், வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ஆய்வு நடத்...

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...