ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு டிஜிட்டல் பிரச்சாரம் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இப்பிரச்சாரம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.


Coimbatore: ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் (SRIOR), உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் பிரத்யேக இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் Dr.குகன் ஆகியோர் பங்கேற்றனர்.



டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர் முன்னிலையில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் தொடங்கி வைத்தார். 2024 உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான உலக சுகாதார நிறுவனத்தின் கருப்பொருளான "மார்பக புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக்கூடாது" என்ற செய்தியுடன் ஒன்றாக அமையும்படி SRIORன் டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரம் அமைந்தது.

இந்த பிரச்சாரம் மூலம் சமுதாயத்தில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியை எடுக்க, மக்கள் https://mhits.in/SRIOR/breast_cancer_2024/ என்ற இணையதளத்திற்கு அல்லது இதற்கான பிரத்தியேக QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.



இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் Dr.குகன் கூறுகையில், தாமதமாக திருமணம் செய்து கொள்வது, கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்வது, புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் நகர்புற பெண்கள் அதிக அளவில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக கூறினார். இந்தியாவில் 50 சதவீதம் மார்பக புற்று நோய்கள் புற்றுநோய் மேம்பட்ட நிலைகளில் (நிலை 3 அல்லது 4) கண்டுபிடிக்கப்படுகிறது என்றும் இந்த நிலையில் (நிலை 3 அல்லது 4) புற்றுநோய் கண்டறியப்பட்டால், 45 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை மட்டுமே நோயாளியை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.



முறையாக உடற்பயிற்சி செய்வது, மதுப்பழக்கத்தை கைவிடுவது, கீரைகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும் என்றும் Dr.குகன் தெரிவித்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...