தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெறுகிறது. பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனைப்பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்ற சிறு தானிய வகைகள் மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இந்த சிறுதானிய வகைகளில் உள்ள சத்துக்களையும், அவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்சியில் பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனைப்பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் ஆகியவை குறித்த தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படும். பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நடைபெறும் இடம்: அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003.

பேருந்து நிறுத்தம்: வாயில் எண். 7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்-641003.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.

அலைபேசி எண்: 94885 18268

தொலைபேசி எண்: 0422-6611268

மின்னஞ்சல்: [email protected]

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...