கோவை: வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை - மலையோர கிராம மக்கள் அச்சம்

கோவை ஓணப்பாளையத்தில் வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதனால் மலையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டத்தில் சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் வடவள்ளி அருகே உள்ள ஓணப்பாளையத்தில் ஒரு வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓணப்பாளையத்தைச் சேர்ந்த ஷயாம் சுந்தர் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை, அங்கு வளர்க்கப்பட்டு வந்த நாயை கடித்து இழுத்துச் சென்றது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதற்கு முன்னதாக, கோவை தொண்டாமுத்தூர், வண்டிக்காரனூர், விராலியூர், மருதமலை மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றன. இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

சமீபத்தில் வண்டிக்காரனூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை.

தற்போது மீண்டும் சிறுத்தை தாக்குதல் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சிறுத்தையை பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...