கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தூய்மை பணியாளர்களுக்கான தாட்கோ திட்ட கடனுதவி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று (27.09.2024) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஆணையாளர் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கான நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நல வாரிய அட்டை வழங்குதல், ESI, PF வசதிகள் பெறுவதற்கான விபரங்களை பதிவு செய்தல், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக பள்ளியில் பயிலும் தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.3,500 உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.



மேலும், சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வருடம் ரூ.450 பிடித்தம் செய்து, ரூ.2.00 இலட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு கிடைக்க வழிவகை செய்தல், தூய்மைப்பணியாளர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க ஏற்பாடு செய்தல் போன்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டை பெறுவதன் மூலமாக திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, கை, கால் இழத்தல், பார்வை இழப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை பெற்று பயன்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, செந்தில்குமரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ), கே.மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ராஜேந்திரன், முருகன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...