சுந்தராபுரம் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று  டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

இந்நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை காமராஜ்நகர் பகுதியில் பிரதான சாலை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி மருத்துவமனைக்கு மிக அருகில் டாஸ்மாக் கடை இருப்பதாக கூறி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மதுக்கடையால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் பயணிக்க வேண்டி இருப்பதாகவும், இந்த கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதனயடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...